முதல்வர் பதவியிலிருந்து விலகியது என் தவறுதான்: மக்களிடம் கேஜ்ரிவால் மன்னிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியது தவறுதான், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி ஆயத்தமாகி வருகிறது. இதனை அடுத்து இன்று கேஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, “ ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் புதிய தேர்தலை சந்திக்க விரும்புகிறது. மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து பொது மக்களிடம் வாக்கெடுப்பு கிடையாது. நாங்கள் ஆட்சியில் இருந்து விலகியதால் டெல்லி மக்கள் மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்கள். எங்களுடையை தவறுக்காக அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் அடுத்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். டெல்லி மக்கள் நாங்கள் அரசு அமைப்பதை விரும்புகின்றனர்" என்று கூறினார்.

டெல்லியில் 2014 -ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி ஆம் ஆத்மி, பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு தரவில்லை என்று குற்றம்சாட்டி கடந்த பிப்ரவரி 14–ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகி, ஆட்சி மன்றத்தையும் கலைக்க முற்பட்டார். ஆனால், அதனை டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், சட்டசபையை முடக்கப்பட்ட நிலையில் வைத்தார். இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு

டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பான முயற்சிகளை ஆம் ஆத்மி கட்சியினர் மேற்கொண்டு வரவதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களை மீண்டும் முட்டாளாக்க முடியாது என பாஜக விமர்சித்துள்ளது. ஆம் ஆத்மியின் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் தேவையற்றது, ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்