செம்மர கடத்தலில் தொடர்பு: 40 அரசு பேருந்து ஓட்டுநர்கள் நீக்கம் - ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத் தலுக்கு உடந்தையாக இருந்த 40 அரசு பேருந்து ஓட்டுநர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து அம்மாநில அரசு உத்தர விட்டுள்ளது.

திருப்பதி சேஷாசலம் வனப்பகு தியில் இருந்து விலை உயர்ந்த செம்மரங்கள் வெளிநாடுகளுக்கு வெட்டிக் கடத்தப்படுகிறது. கடந்த மே 7-ம் தேதி சேஷாசலம் வனப்பகு தியில் செம்மரம் வெட்டி கடத்திய தாக 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது தொடர்பான விசாரணையில், சீன வியாபாரிகள் உட்பட செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த முக்கிய நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பல கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடத்தல் சம்பவங்களில் ஆந்திர வனத்துறை, போலீஸ் அதிகாரி களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந் துள்ளது. எனவே கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 40 அரசு பேருந்து ஓட்டுநர்கள் நேற்று பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் செம்மர கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் உறுதியானதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

ஆந்திர அரசு பேருந்து ஓட்டுநர்கள், செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த தொழிலாளர் களை தங்களது பஸ்களில் ஏற்றிவந்து அடர்ந்த வனப் பகுதிகளில் இறக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ஓட்டுநரும் நாளொன்று ரூ.2000 முதல் ரூ.3000 வரை சம்பாதித்துள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்