மகாராஷ்டிராவில் ரூ. 191 கோடி ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு: கல்வி அமைச்சர் மீது எதிர்க்கட்சிகள் புகார்

By பிடிஐ

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி களுக்கு தீயணைப்புக் கருவிகள் வாங்க ரூ. 191 கோடி ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடந் துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் டெண்டர் கோராமல் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கியிருப்பதாக கல்வி அமைச்சர் வினோத் டாவ்டே மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிகளுக்கு 62 ஆயிரத்து 105 தீயணைப்புக் கருவிகளை வாங்க மாநில அரசு திட்டமிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு தீயணைப்புக் கருவியையும் ரூ. 8321 விலையில் கொள்முதல்செய்து ஒரு பள்ளிக்கு தலா 3 கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தீயணைப்பு கருவி களை வாங்க மின்னணு முறையில் டெண்டர் கோராமல் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வினோத் டாவ்டே மிகப் பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் டாவ்டே நிருபர்களிடம் கூறியதாவது: ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. நிதித்துறை ஆட்சேபம் தெரிவித்த மறுகணமே ஒப்பந்த ஆணையை நிறுத்திவிட்டோம் என்று தெரிவித்தார்.

அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்கள் ஊழல் புகார்களில் சிக்கியிருப்பதால் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்