தொண்டர்களிடம் ரூ.250 ஆண்டு சந்தா: காங்கிரஸ் திட்டம்

By பிடிஐ

நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க தொண்டர்களிடம் ரூ.250 ஆண்டு சந்தா வசூலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா கூறும்போது, “கட்சி நிதித் தேவையை சுயமாகவே பூர்த்தி செய்துகொள்ள தொண்டர்கள் ஒவ்வொருவரும் ரூ.250 ஆண்டு சந்தா செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட உள்ளனர். இதில் வசூலாகும் தொகையில் 75 சதவீதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் (ஏஐசிசி), 25 சதவீதம் பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கும் (பிசிசி) செல்லும். கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி முடிந்த பிறகு சந்தா வசூலிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக் கள் தற்போது ஆண்டுதோறும் ஒரு மாத ஊதியத்தை கட்சிக்கு அளிக்கின்றனர். ஏஐசிசி உறுப்பினர் ரூ.600, பிசிசி உறுப்பினர் ரூ.300-ம் செலுத்த வேண்டியுள்ளது. பிசிசி.க்கு கிடைக்கும் நிதியில் 50 சதவீதத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு பகிர்ந்தளிப்பது கட்டா யம் ஆக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்