நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக பஞ்சாயத்து தேர்தலில் 102 வயது மூதாட்டி வெற்றி

By இரா.வினோத்

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 29, ஜூன் 2 ஆகிய தேதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல் 2 கட்டமாக நடந்து முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் வட்டத்தைச் சேர்ந்த தொட்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம்மா 354 வாக்குகள் பெற்று 136 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் கர்நாடகத்தில் நூறு வயதை கடந்தவர் முதல் முறையாக கிராம பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதே போல நாட்டிலே 102 வயதான மூதாட்டி ஒருவர் கிராம பஞ்சா யத்து உறுப்பினராக தேர்வு செய்யப் படுவதும் இதுவே முதல் முறை.

இது தொடர்பாக கவுதம்மா அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது: என்னுடைய கிராமத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டேன். பிரச்சாரம் செய்தது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது எல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முதல் முயற்சியிலே வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இந்த வெற்றியை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

குடிநீர், சாலை, கழிப்பறை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத எனது கிராமத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தலில் போட்டியிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்த தொட்டாலத்தூர் கிராம மக்களுக்காக‌ உயிருள்ள வரை சேவை செய்வேன்.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லப்படுகிற இந்த காலக்கட்டத்தில் என்னை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

29 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்