எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு இடையே நில அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

By பிடிஐ

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு 3-வது முறையாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், காங்கிரஸ் அரசு திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படி, 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலத்தை கையகப்படுத்த முடியும். அத் துடன் 5 ஆண்டுகளுக்குள் நிலத்தைப் பயன்படுத்தாவிட்டால், அதை விவசாயிகளிடம் திருப்பி தர வேண்டும் என்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இந்த விதிகளை பாஜக அரசு நீக்கி விட்டு, மேலும் சில திருத்தங்களுடன் புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதா மக்களவை யில் நிறைவேறிய நிலையில், போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால் மாநிலங்களவை யில் நிறைவேறவில்லை.

இதற்கிடையில், கடந்த 2014 டிசம்பர், கடந்த மார்ச் மாதம் என 2 முறை நிலம் கைய கப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இரண்டாவது முறை கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் வரும் 3-ம் தேதியுடன் காலாவதியாவதால், 3-வது முறையாக அவசர சட்டத்துக்கு அனுமதி அளிக்க கோரி குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது. இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத் துக்கு 3-வது முறையாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுபோல் அவசர சட்டம் கொண்டு வரப்படுவது இது 13-வது முறையாகும். நிலம் கையகப்படுத்தும் மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்