இந்திய பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பால் பருவமழை குறைவு: ஆய்வில் தகவல்

By பிடிஐ

இந்தியப்பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பதே தென்மேற்கு பருவ மழை குறைய காரணம் என இந்திய வானிலை ஆராய்ச்சி நிபுணர் தலைமையில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ராக்ஸி மேத்யூ கால் என்பவர் தலைமையில் சர்வதேச ஆய்வா ளர்கள் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

1901-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை கோடை பருவமழையின் போக்கு தென் ஆசியாவின்பல பகுதிகளில் எப்படி உள்ளது என ஆராயப்பட்டது.

இந்தியாவின் வடக்குப்பகுதி மற்றும் மத்தியகிழக்கு மற்றும் கங்கை, பிரம்மபுத்ரா வடிநிலப் பகுதி, இமாலய அடிவாரங்களில் மழை பொழிவது பெரிய அளவில் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் 10 முதல் 20 சதவீதம் அளவுக்கு மழை குறைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் வெப்பம் அடைந்துள்ளதே மழை வெகுவாக குறைய காரணம் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இந்தியப்பெருங்கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, இந்திய துணைக்கண்டப்பகுதியில் வெப்பம் குறைந்துள்ளது. இதனால், நிலம்-கடல் பரப்பின் வெப்ப வேறுபாடு பலவீன மடைந்து, மழைப்பொழிவு குறைந்து விட்டது.

கோடையில் நிலம்-கடல் பரப்பின் வெப்ப நிலை வேறு பாடு பருவமழையின் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங் குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

51 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

மேலும்