வெளிநாடு சென்று பணிக்குத் திரும்பாத ஐஏஎஸ் அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

நாட்டின் உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, மத்திய, மாநில அரசு களின் கீழ் ஐஏஎஸ் அதிகாரிகளாக பலரும் பணியாற்றி வருகின்றனர். அரசுகளின் சார்பில் பணி நிமித்த மாக அல்லது வேறு சில காரணங் களுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் சிலர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கி விடுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

தாம் சார்ந்துள்ள அரசுகளின் செல்வாக்கை பயன்படுத்தி, இவர் கள் செல்லும் நாடுகளில் தனியார் நிறுவனங்களின் முக்கியப் பதவி களில் சேர்ந்து கொள்கிறார்கள். தாங்கள் பணியாற்றிய அரசு களிடம் முறையாக அனுமதி பெறா மல் இவ்வாறு சட்டவிரோதமாக தங்கிவிடும் செயலை தடுக்க முடியாமல் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதில் சிலர், பல ஆண்டு கள் வெளிநாட்டில் பணியாற்றி சம்பாதித்த பின் மீண்டும் தங்கள் அரசுகளிடம் `சமரசம்’ பேசி இணைந்து கொள்கிறார்கள். இதை கவனத்தில் கொண்ட பிரதமர், இந்த அதிகாரிகள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நிர்வாகப் பணி யாளர் மற்றும் பயிற்சி துறைக்கு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பாதவர்களின் பட்டியல் மற்றும் விவரத்தை சேகரித்து அனுப்பும்படி கேட்டிருக்கிறார்.

இது குறித்து `தி இந்து’விடம் டெல்லி ஐஏஎஸ் அதிகாரிகள் கூறும்போது, “நம் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சட்டதிட்டங்கள் உறுதியாக இருப்பது போல் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இல்லை. மத்தியில் புதிய அரசு பதவியேற்கும் போதெல்லாம் எங்களில் சிலர் இவர்கள் மீது தொடர்ந்து புகார் அனுப்புகின்றனர். இதன் மீது முதன் முறையாக பிரதமர் மோடி நட வடிக்கை எடுக்க முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றனர்.

இறுதியாக நிர்வாகப் பணி யாளர் மற்றும் பயிற்சித் துறை எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் வெளிநாடு சென்று நாடு திரும்பாமல் இருப்ப தாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலங் களை சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு வெளிநாடுகளில் தங்கி விட்டவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

1993-ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த உ.பி. அதிகாரி ஒருவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளிநாடு சென்றார். இவர் 20 வருடங்களாக நாடு திரும்பாமல் தற்போது பாங்காங்கில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் வெளிநாடு சென்ற மற்றொரு அதிகாரி பல ஆண்டு களுக்கு பின் நாடு திரும்பி, மீண்டும் பணியில் சேர்ந்து உ.பி.யில் முதன்மைச் செயலாளராக இருக்கிறார். 1988-ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த மேற்கு வங்க அதிகாரி அமிதாப் முகர்ஜி, கடந்த 2001-ல் வெளிநாடு சென்றவர், இதுவரை நாடு திரும்பவில்லை. இவர் உலக வங்கிக்காக அமெரிக்காவில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

1991-ம் வருடம் ஐஏஎஸ் முடித்த சிக்கிம் மாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நாடு திரும்பாமல் உள்ளார். இவர்களில் பலர் தங்கள் பணியின் ஓய்வுக்காலம் நெருங்கும் போது வெளிநாட்டுப் பயண வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தலைமறைவாகி விடுவதாக கூறப் படுகிறது. எனினும் இவ்வாறு வெளிநாடு செல்லும் அதிகாரி களில், அங்கு பணியில் சேர்ந்தபின் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பவர்களும் உண்டு.

இவர்கள் வெளிநாடுகளில் தங்கி விட்டது அறியாமலே பல சமயம் அவர்கள் மாத ஊதியம் குறிப்பிட்ட தேதிகளில் வழக்கம்போல் சேர்ப்பிக்கப்பட்டு விடுகிறது. இந்த ஊதியம், இவர்கள் திரும்ப மாட்டார்கள் என உறுதிப்படுத்தப்படும் வரை அல்லது அவர்கள் மீது சந்தேகம் கிளம்பும் வரை நிறுத்தப்படுவதில்லை.

பயிற்சிக்கு ரூ.10 லட்சம் செலவு

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 6,270 ஆகும். இதில் தற்போது பணியில் இருப்பவர்கள் 4,799 மட்டுமே.

மத்திய அரசுக்கு தேவைப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 952. ஆனால் தற்போது பணியில் இருப்பவர்கள் 643 மட்டுமே. சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் ஒருவருக்கு ஐஏஎஸ் பயிற்சிக்காக அரசு செலவழிக்கும் தொகை ரூ. 10 லட்சம் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்