மயிரிழையில் உயிர் தப்பினார் கட்கரி

By பிடிஐ

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று மயிரிழையில் உயிர் தப்பினார்.

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் ஹல்தியா சென்றார்.

ஹல்தியாவில் ஹெலிபேடில் இறங்கும்போது அவரது ஹெலிகாப்டரின் பிளேடில் சிறிய துணி ஒன்று சிக்கிக்கொண்டது. விமானி லாவகமாக ஹெலிகாப்டரை இயக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து கட்கரி செய்தியாளர்களிடம் கூறும்போது, "எனது ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது அதன் பிளேடில் சிறிய துணி சிக்கிக்கொண்டது. ஆனால், விபத்து ஏதும் ஏற்படவில்லை. நான் பத்திரமாக இருக்கிறேன்.

ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதியருகே கார்பெட்கள், கொடிகள் ஆகியனவற்றை பயன்படுத்துவதை கவனமாக தவிர்க்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்