இந்தியா-வங்கதேசம் இடையே 2 பேருந்து சேவைகள் அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

By பிடிஐ

இந்திய-வங்கதேசம் இடையே பிணைப்புறுதியை ஏற்படுத்தும் நோக்கமாக 2 பேருந்து சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சனிக்கிழமையன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கொல்கத்தா-டாக்கா-அகர்த்தலா, மற்றும் டாக்கா-ஷில்லாங்-குவஹாத்தி ஆகிய இரு பேருந்து சேவைகள் மேற்கு வங்கத்தை, வங்கதேச தலைநகர் டாக்கா வழியாக 3 வடகிழக்கு மாநிலங்களை இணைக்கிறது.

இந்த பேருந்து சேவைகளின் அறிமுக நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடி அகர்தலா-டாக்கா-கொல்கத்தா பேருந்து சேவைக்கான பயணச்சீட்டை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் அடையாளமாக அளிக்க, ஷேக் ஹசீனா, டாக்கா-ஷில்லாங்-குவஹாத்தி பேருந்துக்கான பயணச்சீட்டை மோடியிடம் அளித்தார்.

கொல்கத்தா-டாக்கா-அகர்தலா சேவைக்கான பயணச்சீட்டை மம்தா பானர்ஜி, ஷேக் ஹசீனாவுக்கு அளித்தார்.

கொல்கத்தா-அகர்தலா-டாக்கா மார்க்கத்தில் 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன, ஒன்று மேற்கு வங்க அரசாலும் மற்றொன்று திரிபுரா அரசாலும் நடத்தப்படும்.

டாக்கா-ஷில்லாங்-குவஹாத்தி பேருந்து சேவையை வங்கதேசம் நடத்தவுள்ளது.

இந்தப் பேருந்து சேவைகள் மூலம் வடகிழக்கு மாநிலங்களான, திரிபுரா, அசாம், மேகாலாயா மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்று தெரிகிறது.

கொல்கத்தா-டாக்கா-அகர்தலா பேருந்து சேவையினால் மேற்கு வங்கத்திற்கும் திரிபுராவுக்கும் இடையே உள்ள தூரம் 560கிமீ குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளுக்கு இடையேயான ரயில்வே இணைப்பும் வலுப்படுத்தப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்