கடந்த 35 ஆண்டுகளில் நக்சல்களின் வன்முறைக்கு 15 ஆயிரம் பேர் பலி

By செய்திப்பிரிவு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

1980-ம் ஆண்டு முதல் 2015 மே 31-ம் தேதி வரையிலான காலத்தில் நாடு முழுவதும் நடந்த நக்சல்களின் வன்முறை தாக்குதலுக்கு பொதுமக்கள் தரப்பில் 12,177 பேரும் நக்சல் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப்படையினர் தரப்பில் 3,125 பேரும் உயிரிழந் துள்ளனர். இதுபோல், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு 4,768 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளில் காவல் துறையை நவீனப்படுத்து வதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.3,038.86 கோடி வழங்கி உள்ளது. 2012-13 மற்றும் 2014-15 நிதி ஆண்டுக்கு இடைப் பட்ட காலத்தில், காவல் துறை நவீனமயமாக்கலுக்காக ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.161 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.377 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ.73 கோடி, ஜார்க்கண்டுக்கு ரூ.69 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவுக்கு 2014-15-ல் ரூ.68.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நக்சல் பாதிப்புமிக்க 10 மாநிலங்களில் 400 போலீஸ் நிலையங்களை மேம்படுத்த மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ரூ.2 கோடியை அரசு வழங்கும். இதற்கான செலவை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசும் 80: 20 என்ற விகிதத்தில் ஏற்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

9 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்