2ஜி வழக்கில் இறுதி விசாரணை இன்று தொடங்குகிறது

By பிடிஐ

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் இன்று இறுதி விசாரணை தொடங்குகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து பல்வேறு வழக்கு களைப் பதிவு செய்துள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்குப் பிரதிபலனாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடியை கைமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உட்பட 19 பேர் மீது பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஓ.பி. சைனி முன்பு இன்று தொடங்குகிறது.

இறுதிகட்ட விசாரணை முடிந்த பிறகு தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவிப்பார்.

வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டு கள் வரை சிறை தண்டனை விதிக் கப்படலாம் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

8 mins ago

க்ரைம்

6 mins ago

இந்தியா

21 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

42 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

கருத்துப் பேழை

36 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்