சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை

By பிடிஐ

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் பாலிவுட் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தியிடம் அமலாக் கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனம், பொது மக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்நிறுவன தலைவர் சுதிப்தா சென் உட்பட பலர் கைது செய் யப்பட்டனர். இந்த மோசடியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் தொடர்பு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், திரிணமூல் எம்.பி.யும் பாலிவுட் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, “சாரதா நிதி நிறுவனத்துடன் எனக்குள்ள தொடர்பு முழுக்க முழுக்க வர்த்தகம் தொடர்புடையது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. சாரதா நிதி நிறுவனத்தை பிரபலப்படுத்தும் விளம்பரங்கள், வீடியோக்களில் நடித்து கொடுத்தேன். ஆனால், மோசடிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மோசடி செய்யும் உள்நோக்கம் இருந்திருந்தால், நான் சாரதா நிதி நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிக்காமல் இருந்திருப்பேன். மேலும், அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தை விரைவில் திருப்பித் தந்து விடுவேன்” என்று அதிகாரிகளிடம் மிதுன் கூறியிருக்கிறார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவரு டைய பதில்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மிதுன் சக்ரவர்த்தி அளித்த பதில்கள் திருப்தியாக இருந்தது என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சாரதா நிதி நிறுவனத்தின் விளம்பர தூதராக மிதுன் சக்ரவர்த்தி இருந் தார். அப்போது சாரதா நிதி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 கோடி மிதுன் கணக் குக்கு மாற்றப்பட்டதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்