கர்நாடகத்தில் ஊராட்சித் தேர்தல்: 554 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை

By இரா.வினோத்

கர்நாடக மாநிலத்தில் உள்ள 15 மாவட்டங்களில் 3,156 கிராம ஊராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் 4,460 இடங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 554 இடங்களில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

கர்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக கிராம ஊராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக நேற்று மைசூரு, சிக்கமகளூரு, தென் கன்னடா, ஹாசன், குடகு, மண்டியா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 3,156 கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. 43 ஆயிரத்து 579 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 1.21 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் 4,460 இடங்களில் வேட் பாளர்கள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டனர். 28 இடங்களில் நீதிமன்ற உத்தரவின் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. 554 இடங்களில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொது மக்கள் வரிசையாக நின்று மாலை 5 மணி வரை வாக்களித்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான சித்தராமண்ண ஹூண்டியில் வாக்களித்தார்.

முதல்கட்ட கிராம ஊராட்சித் தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2-ம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 5-ம் தேதி நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

36 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்