ஸ்மார்ட் நகரங்களை தேர்வு செய்வதற்கு விரைவில் விதிமுறைகள்

By பிடிஐ

நாடு முழுவதிலும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கான வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய திட்டமான ஸ்மார்ட் நகரங்கள் திட்டம், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னோடி திட்டமாக உள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கு நகரங்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு விதிமுறை களை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை வகுத்து வருகிறது. இந்நிலையில் இந்த விதிமுறைகள் அடுத்த வாரம் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கை வெளியிடப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “அறிவிக்கை வெளியான பிறகு ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்கு நகரங்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மாநிலங் கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள் கேட்டுக்கொள்ளப்படும். இதில் தேர்ந் தெடுக்கப்படும் நகரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டு களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும்.

திட்டப்படி இந்த ஆண்டு 20 நகரங்கள் தேர்வு செய்யப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த 2 ஆண்டுகளில் தலா 40 நகரங்கள் தேர்வு செய்யப்படும். திட்டத்தின் நோக்கங்களை அடையும் வாய்ப்புள்ள நகரங்கள் போட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்