ராஜ்நாத் சிங் வருகை: சத்தீஸ்கரில் குண்டுகள் கண்டுபிடிப்பு

By பிடிஐ

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நேற்று சக்திவாய்ந்த இரண்டு வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தலா 10 கிலோ எடை கொண்ட அந்த வெடி குண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் அந்த மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது சுமார் 300 கிராமவாசிகளை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றனர். உள்ளூர் தலைவர்களின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று பிற்பகலில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு வந்தார். அவர் சுக்மா மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இதையொட்டி அந்தப் பிராந்தியத்தில் தீவிர ரோந்துப் பணி நடைபெற்றது. அப்போது டோமாபால் என்ற பகுதியில் சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை தலா 10 கிலோ எடை கொண்டவை ஆகும். அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாகச் செயலிழக்கச் செய்தனர்.

சுக்மா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாவோயிஸ்ட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ்காரர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

55 mins ago

இந்தியா

41 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்