மோடி அரசின் ஓராண்டு ஆட்சி: பாஜக எம்.பி.க்கள் பாராட்டு

By பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓராண்டு பூர்த்தி செய்வதையொட்டி பாஜக எம்.பி.க்கள் நேற்று அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மோடியின் ஓராண்டு ஆட்சியை பாராட்டி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“நோக்கங்களை வரையறை செய்து அரசின் திசையறியா போக்கை தடுத்து நிறுத்தியது, மாநிலங்களின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி மூலம் ஆட்சி நிர்வா கத்தை மேம்படுத்தியது, வெளிப் படையான, பொறுப்புடைய அரசை அளித்தது, சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பெருமையை உயர்த்தியது ஆகியவற்றுக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறோம்” என்று இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், “தேசிய ஜன நாயக கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவை ஒரு வாரம் கொண்டாட வேண்டும். ஓராண்டில் அரசின் முன்முயற்சிகள் மற்றும் சாதனை களை கட்சியின் ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதி மக்களிடையே விளக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “மோடியின் தலைமைக்கு இக்கூட்டத்தில் ஒரு மனதாக பாராட்டு தெரிவிக்கப் பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக் கப்பட்டது” என்றார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “வளர்ச்சி அரசியலை பாஜக முன்னெடுத்து செல்கிறது. ஆனால் சில கட்சிகள் வறுமை அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர். நாட்டு மக்கள் ஏழ்மையில் இருப் பதையே இவர்கள் விரும்பு கின்றனர். இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

மோடியின் அரசு வரும் 26-ம் தேதி ஓராண்டை பூர்த்தி செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்