வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார்கள் 2-வது நாளாக போராட்டம்: பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுப்பு

By பிடிஐ

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் 2-வது நாளாக போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் சேவைகள் பெருமளவு பாதிக் கப்பட்டுள்ளன. பேச்சுவார்த் தைக்கு அரசு விடுத்த அழைப்பை குஜ்ஜார் தலைவர்கள் நிராகரித் துள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். சாலைகள், ரயில் பாதைகளை மறித்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் டெல்லி-மும்பை, பரத்பூர்-ஹிண்டவுன் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் பாதிக்கப்பட் டுள்ளதால் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் சிக்கி தவிக் கின்றனர். குஜ்ஜார் தலைவர்களை மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து, குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் பெய்ன்ஸ்லாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் இதனை குஜ்ஜார் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.

“அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால் இப்பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என குஜ்ஜார் அர்க் ஷான் சங்கர்ஷ் சமிதி செய்தித் தொடர்பாளர் ஹிம்மத் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து முதல்வர் வசுந்தரா ரஜே சிந்தியா, உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, டிஜிபி மனோஜ் பட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா மீண்டும் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தையொட்டி பயானா நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏராளமான காவலர் கள் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

35 mins ago

கல்வி

28 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

31 mins ago

ஓடிடி களம்

38 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்