தெலங்கானா அரசுக்கு ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்: ஆந்திர வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க தடை

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவிலிருந்து தெலங்கா னாவுக்கு செல்லும் வாகனங் களுக்கு நுழைவு வரி வசூலிக்க ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.1 கோடிக்கும் மேல் வசூலானது.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலத்துக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமாக நுழைவு வரி செலுத்த வேண்டும் என தெலங்கானா அரசு (அரசானை எண் 15) உத்தரவு பிறப் பித்தது.

இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து தெலங்கானா எல்லையில் உள்ள கம்மம், மகபூப் நகர், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் கூடுதல் வாகன சோதனைச் சாவடி அமைத்து நுழைவு வரி வசூலிக்கப் பட்டது.

இந்த வரி வசூலிப்பின் மூலம் ஒரு பஸ் ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் முதல் ரூ.1.9 லட்சம் வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல தனியார் நிறுவன பஸ்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஹைதராபாத் செல்லும் பயணி களுக்கு முன்பதிவு முறையை ரத்து செய்தது. சுமார் 12 ஆயிரம் தனியார் பஸ்கள் ஹைதராபாத் செல்லாமல் நிறுத்தப் பட்டன.

இந்நிலையில், நுழைவு வரிய எதிர்த்து தனியார் பஸ், லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், வரும் 7-ம் தேதி வரை வரி வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது. இது தொடர்பான விசாரனையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் நேற்று முதல் மீண்டும் தனியார் பஸ், லாரி, மேக்ஸி கேப் வாகனங்கள் ஹைதராபாத்துக்கு செல்லத் தொடங்கின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 secs ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்