சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில்அரசு வழக்கறிஞர் வாதம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கட்டுப்படுத்த முடியாது என அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவிடம் திங்கள்கிழமை வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதல்வர் ஜெயலலிதா, சசிகலா,இளவரசி ஆகி யோர் சார்பில் வழக்கறிஞர் பி.குமார் புதிய மனுவை தாக்கல் செய்தார். அவர் வாதிடுகையில், ‘‘ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங் களின் சொத்துகள் இணைக்கப் பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து, 'சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மனுக்களை முதலில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். அதன் பிறகே பெங் களூர் சிறப்பு நீதிமன்றம் மூல வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும்'என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடைபெற்று கொண்டி ருக்கும் இறுதி வாதத்தை நிறுத்திவிட்டு உடனடியாக நிறுவனங்களின் சொத்துகளை விடுவிப்பது தொடர்பான மனுவை விசாரிக்க வேண்டும்''என்றார்.

அரசு வழக்கறிஞர் ஆட்சேபம்

இதனை ஆட்சேபித்த அரசு வழக்கறிஞர் பவானி சிங், “சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை எங்கு நடந்தாலும் அதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராகி வாதாடும் அதிகாரம் எங்களுக்கு (அரசு வழக்கறிஞர் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி) மட்டுமே இருக்கிறது.

லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் அரசு தரப்பில் நாங்கள் (அரசு வழக்கறிஞர் பவானி சிங்,முருகேஷ் எஸ்.மரடி) ஆஜராகவில்லை. உச்சநீதிமன்றத் தால் இவ்வழக்கிற்காக நியமிக்கப் பட்ட எங்களுக்கு பதிலாக வேறு வழக்கறிஞர் ஆஜராகி இருக்கி றார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தவரை விசாரிக்கும் முழு தகுதியும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தை கட்டுப்படுத்த முடியாது''என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி'குன்ஹா, புதிய மனு மீதான தீர்ப்பை மே 7-ம் தேதி வழங்குவதாக அறிவித்தார்.

திங்கள்கிழமை மாலை வரை அரசு வழக்கறிஞர் பவானி சிங் 230 அரசு தரப்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்ப டையில் இறுதிவாதம் நிகழ்த்தியுள்ளார்.

மீண்டும் செவ்வாய்க்கிழமை தனது இறுதிவாதத்தை தொடர்ந்து நிகழ்த்துமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்