பென்சில் திருடியதாகப் புகார்: தலைமை ஆசிரியர் அடித்ததால் 10 வயது மாணவன் பலி - உத்தரப் பிரதேச மாநிலத்தில் சோகம்

By பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் உள்ள ஒரு பள்ளியில், மாணவன் ஒருவன் பென்சில் திருடியதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த மாணவனை தலைமை ஆசிரியர் தாக்கியுள்ளார். அதன் காரணமாக அந்த மாணவன் பலியாகியுள்ளான்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ரஹிலாமு கிராமத்தில் உள்ளது சவுத்ரி துவாரிகா பிரசாத் அகாடெமி எனும் பள்ளி. இங்கு மூன்றாம் வகுப்புப் படித்து வந்த மாணவன் சிவா ராவத் (10).

கடந்த செவ்வாய்க்கிழமை இந்தப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவனின் பென்சிலும் ரப்பரும் காணாமல் போனது. அதனை சிவா ராவத் தான் திருடியதாகப் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் லலித் குமார் வர்மா அழைத்து விசாரித்தார். திடீரென சிவா ராவத்தின் வயிற்றில் குத்துகள் விட்டுத் தாக்கியுள்ளார்.

அன்று மாலை வீடு திரும்பிய சிவா வயிறு வலிப்பதாகக் கூறி ரத்த வாந்தி எடுத்தார். அவரை அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஆசிரியர் தாக்கியதன் காரணமாக உள்காயம் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த தலைமை ஆசிரியர் கைது செய் யப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் இவர் மாணவர்களைத் தாக்கிய தாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாகவும் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்