வரும் 27 முதல் எம்.பி.க்களுக்கு யோகா பயிற்சி

By பிடிஐ

வரும் 27ம் தேதி முதல் எம்.பி.க்களுக்கு யோகா பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியை ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது.

இதுகுறித்து ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் கூறிய தாவது:

இந்தப் பயிற்சிகள் மூலம் எம்.பி.க்களின் மன அழுத்தம் குறைந்து அவர்கள் தங்களது தொகுதியில் சிறப்பாகப் பணியாற்ற உதவும்.

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனமும், யோகா பிரபா பாரதி அறக்கட்டளையும் இணைந்து இப்பயிற்சிகளை வழங்க உள்ளன.

இந்தப் பயிற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் உடலை வளைக்கும் ஆசனங்களோ அல்லது மூச்சுப் பயிற்சிகளோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

சுற்றுச்சூழல்

7 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

மேலும்