சத்தீஸ்கரில் 3-வது நாளாக மாவோயிஸ்ட் தாக்குதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சத்தீஸ்கரில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, கான்கெர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜிதேந்திர சிங் கூறும்போது, "இன்று (திங்கள்கிழமை) காலை கான்கெர் மாவட்டத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான வாகனத்தை குறிவைத்து மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

தொடர்ந்து எல்லை பாதுகாப்பு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் பலியானார். பின்னர், மாவோக்கள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். அவர்களைப் பிடிக்க கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன" என்றார்.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் கன்கெர் மாவட்டத்தில் உள்ள இரும்புச் சுரங்க வளாகத்துக்குள் நேற்று புகுந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) சத்தீஸ்கரின் போலம்பள்ளி-பிட்மெல் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 7 போலீஸார் பலியாகினர் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்