எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 61 மலையேற்ற வீரர்களை மீட்டது ராணுவம்: 19 உடல்களையும் மீட்டனர்

By பிடிஐ

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 61 மலையேற்ற வீரர்களை இந்திய ராணுவத்தின் மலைப் பயணப் பிரிவினர் மீட்டனர். இதே குழு நேபாளத்தில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் 19 சடலங்களையும் மீட்டது.

நேபாளத்தில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ராணுவ குழுவினர் எவரெஸ்ட் அடிவார முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனிச்சரிவு ஏற்பட்டபோது அதில் அவர்களது சாதனம் புதையுண்டது. இருப்பினும் அவர்கள் பத்திரமாக இருப்பதுடன் மீட்புப் பணியிலும் உதவி வருகின்றனர்.

19 சடலங்களை மீ்ட்ட ராணுவக் குழுவினர், நில நடுக்கத்தில் காயம் அடைந்த 61 பேரையும் மீட்டனர். மீட்கப்பட்ட இவர்களுக்கும் சர்வதேச மலையேற்ற வீரர்கள் பலருக்கும் ராணுவ மருத்துவ அதிகாரி சிகிச்சை அளித்தார். மருந்துகளும் வழங்கப்பட்டது.

நேபாளத்துக்கு மொத்தம் 18 மருத்துவக் குழுக்களை அனுப்பிவைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

இதில் ஏற்கெனவே 6 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மற்றவை தயார் நிலையில் உள்ளன. 10 பொறியியல் பணிப் பிரிவும் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.மொத்தம் 10 ஆயிரம் கம்பளிகள், 1,000 தற்காலிக கூடாரங்கள் தயார் நிலையில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்