பஞ்சாபில் விவசாயி வயிற்றில் 140 நாணயம், 150 ஆணி: மருத்துவர்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

பஞ்சாபில் ஒரு விவசாயி வயிற்றில் இருந்த 140 நாணயங்களையும் 150 ஆணிகளையும் கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்றி யிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

34 வயது விவசாயி, ராஜ்பால் சிங் வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். இரைப்பை - குடலியல் மருத்துவரை சந்தித்தார் ராஜ்பால் சிங். எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ராஜ்பால் சிங்கிடம் மருத்துவர் கோயல் விசாரித்தார். அப்போது, “வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும். இதனால் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவேன். அதைச் சமாளிக்க கையில் கிடைக் கும் நாணயங்கள், ஆணிகள், சிறு கம்பிகளை விழுங்கிவிடுவேன். விழுங்குவது கஷ்டம் என்பதால் பால், ஜூஸ் போன்றவற்றை வாயில் ஊற்றி, மருந்து போல உள்ளே தள்ளிவிடுவேன்’ என்றார்.

கடந்த 3 ஆண்டுகளாக அவர் கண்டதையும் விழுங்கி வந்ததால் வயிறு நிறைந்துவிட்டது. மிகக் கூர்மையான, ஆபத்தான பொருட் களை விழுங்குவதால் குடலில் காயம் ஏற்படும். உயிருக்கே ஆபத் தாக முடியும் என்று மருத்துவர் எச்சரித்தபோதுதான் ராஜ்பால் சிங்குக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது.

அவருக்கு இதுவரை 240 முறை எண்டோஸ்கோபி செய்யப் பட்டுள்ளது.

5 மருத்துவர்கள் சேர்ந்து 9 மணி நேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்கள். பெரும்பாலான நாணயங்களும், ஆணிகளும் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் பொருட்களை இன்னும் 7 நாட்கள் கழித்து, மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் நீக்க இருக்கிறார்கள்.

வயிற்றில் இருந்து பொருட்கள் எடுக்கப்பட்ட பிறகு மிகவும் நிம்மதியாக உணர்கிறேன். இனி இதுபோன்ற காரியத்தை செய்யவே மாட்டேன் என்கிறார் ராஜ்பால் சிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்