ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

By இரா.வினோத்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தது. வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஒத்தி வைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தலா 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால் வரும் கர்நாடக உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனு சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 41-வது நாளாக‌ நேற்று விசார ணைக்கு வந்த‌து.

அப்போது, வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி 14 பக்கங்கள் அடங்கிய எழுத்துப் பூர்வ இறுதிவாதத்தை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி, எழுத்து பூர்வ இறுதிவாதத்தைப் பற்றி சுருக்கமாக விளக்குமாறு சுப்பிர மணியன் சுவாமியிடம் கேட்டார். சுப்பிரமணியன் சுவாமியும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அப்போதுஅப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''எம்.பி., எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் போன்ற பொது ஊழியர்கள் சொத்து சேர்ப்பது குற்றமா? எந்தெந்த பிரிவுகளில் அது குற்ற மாக கருத வேண்டும்? வரு மான வ‌ரி செலுத்துவதில் அரசியல் வாதிக்கும், தொழில் அதிபருக்கும் ஏதேனும் வரையறை உள்ளதா? எந்த சட்ட நூலின் அடிப்படையில் இதனை கூறுகிறீர்கள்?''என்றார்.

அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, ''நான் வழக்கறிஞர் இல்லை. எனக்கு 24 மணி நேரம் வாய்ப்பு வழங்கினால், வீட்டுக்கு சென்று படித்துவிட்டு வாதிடுகிறேன். நீங்கள் எழுத்துப் பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி வழங்கியதால் சட்ட நூல்களை படிக்காமல் வந்துவிட்டேன். நான் கூறியவை யாவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப் பட்டுள்ளன''என்றார்.

உடனே நீதிபதி, 'இந்திய அரசிய லமைப்பு சட்டமா? எந்த நூல்? எத்தனையாவது தொகுப்பு?' எனக்கேட்டார். அதற்கு சுப்பிர மணியன் சுவாமி மவுனமாக இருந்ததால், 'பொது ஊழியர் வருமான வரி கொள்கை' குறித்த நூலை கொடுத்து, அவரை வாசிக்குமாறு நீதிபதி கூறினார். எனவே சுப்பிரமணியன் சுவாமி அந்த நூலில் 21 பக்கங்களை வாசித்தார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்திற்கு 5 பக்கங்கள் கொண்ட‌ பதில் விளக்க வாதத்தை தாக்கல் செய்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதங்களுக்கு, 4 பக்கங்கள் கொண்ட விளக்க வாத‌த்தை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி அரசு வழக்கறிஞர் பவானிசிங், ஜெயலலிதா உள் ளிட்ட நால்வர் தரப்பு வழக்கறிஞர்கள், 6 தனியார் நிறுவ னங்களின் வழக்கறிஞர் குல சேகரன் ஆகியோரிடம், ''இவ்வழக் கில் உங்கள் அனைவரது தரப்பு வாதமும், ஆவணங்கள் தாக்கல் செய்வதும் முடிந்துவிட்டதா? விசாரணையில் ஏதேனும் விடப் பட்டுள்ளதா?''என வினவினார்.

அதற்கு அனைவரும்,'' அனைத்து தரப்பு வாதமும், ஆவணங்கள் தாக்கல் செய்வதும் முடிந்துவிட்டன'' என்றனர்.

எனவே நீதிபதி,''ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு,மெடோ அக்ரோ ஃபார்ம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மீதான வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது''என தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்