தமிழகத்தில் தேவகவுடாவிற்கு ஆதரவு; கர்நாடகாவில் எதிர்ப்பு: தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சியினர்

By இரா.வினோத்

மக்களவைத் தேர்தலில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

கிருஷ்ணகிரியில் வேட்பாளராக என்.எஸ்.எம்.கவுடாவை நிறுத்தி யிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் 18 தொகுதிகளில் அக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிப்பதாக தேவகவுடா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மற்றும் பொள்ளாச்சி யில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

கர்நாடகாவில் எதிர்ப்பு

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி களை ஆதரிக்கும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடகாவில் அக்கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை அறிவித் திருக்கிறது.

சிக்மகளூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழரான விஜயகுமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செயகுமாரை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதே போல இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் மற்ற தொகுதிகளிலும் தேவகவுடா ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக போட்டியாக ம.ஜ.த. வேட் பாளர்களை அறிவித்திருக்கிறார்.

3-வது அணியில் அங்கம் வகிக்கும் தேவகவுடா கம்யூ னிஸ்ட் கட்சிகளை எதிர்ப்பதால் அக்கட்சிகளை சேர்ந்த தொண் டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

51 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

20 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

மேலும்