உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்துப் போராடுங்கள்: நவீன் பட்நாயக்

By பிடிஐ

நவீன் பட்நாயக்கின் தந்தையும், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான‌ பிஜு பட்நாயக்கின் 99வது பிறந்தநாள் நேற்று கொண் டாடப்பட்டது. அப்போது பேசிய நவீன் பட்நாயக் கூறியதாவது:

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஒடிசாவின் நிதி நிலை சிறந்ததாக உள்ளது என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், இந்த மாநிலத்துக்கான 14வது நிதி ஆணையத்தின் மானியம் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் நிதி நிலை சிறந்ததாக இருப்பது தவறா? நிதி நிலை சரியில்லாத பல மாநிலங்கள் நல்லதொரு பங்கைப் பெற்றுள்ளன. சிறப்பு அந்தஸ்து பெற ஒடிசாவுக்கு எல்லா தகுதிகளும் இருந்தும் நமக்கு மானியம் கிடைக்கவில்லை எனில், இது பாரபட்சம் தானே?

இந்த மாநிலத்தில் சுமார் 25 சதவீத மக்கள் தொகையினர் பழங்குடிகள் ஆவர்.

இயற்கைப் பேரிடர் களால் ஒடிசாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மத்தி யில் பொறுப்பேற்கும் அனைத்து அரசுகளாலும் ஒடிசா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.

அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் (மக்கள்) எல்லோரும் உங் கள் உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்துப் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

24 mins ago

கல்வி

38 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்