சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடி வழக்கில் இன்று தீர்ப்பு

By பிடிஐ

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் வரவு-செலவுக் கணக்கில் பல கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிவிஎல்என் சக்ரவர்த்தி, ஏராளமான ஆவணங்கள் இருப்பதாகக் கூறி மார்ச் 9-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். இதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

முந்தைய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில் பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய்க்கு தில்லுமுல்லு செய்ததாகவும், லாபத்தை மிகைப்படுத்திக் காட்டியதாகவும் அதன் அப்போதைய தலைவர் பி.ராமலிங்க ராஜு தெரிவித்தார்.

இந்த முறைகேடு விவகாரம் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மோசடி, குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இப்போது ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

48 mins ago

க்ரைம்

29 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

42 mins ago

தொழில்நுட்பம்

24 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்