6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், 7 போர்க் கப்பல்கள் கட்ட அரசு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், 7 போர்க்கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டில் நீர்மூழ்கி கப்பல் கள் தயாரிக்கும் திட்டத்துக்கு 1999-ம் ஆண்டில் அனுமதி அளிக் கப்பட்டது. அதன்படி 30 ஆண்டு களில் 24 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதில் முதல்கட்டமாக 6 ஸ்கார்பினி நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு மேலும் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு விவ காரங்களுக்கான மத்திய அமைச் சரவைக் கூட்டம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் புதிதாக கட்டப்பட உள்ள 6 நீர்மூழ்கி கப்பல்களையும் அணு சக்தியில் இயங்கும் கப்பல்களாக வடிவமைக்க ஒப்புதல் அளிக்கப் பட்டது. மேலும் புதிதாக 7 போர்க் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக் கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதில் 4 போர்க்கப்பல்கள் மும்பையிலும் 3 போர்க்கப்பல்கள் கொல்கத்தா கப்பல் கட்டுமானத் தளத்திலும் கட்டப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்