‘அறநெறி அறிவியல்’பாடத்தை கட்டாயமாக்கக் கோரி வழக்கு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ‘அறநெறி அறிவியல்’ பாடத்தை கட்டாயமாக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் சந்தோஷ் சிங் ஒரு பொதுநல வழக்கு தொடுத் துள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:

சமுதாயத்தில் அறநெறி வேகமாக குறைந்து வருகிறது. எந்த வழியிலாவது பணம் ஈட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் ஒரே நோக்கமாக உள்ளது. இந்த நிலையைப் போக்க, மாணவர்களை சிறந்த குடிமகனாக உருவாக்குவதற்கு பள்ளிகளில் அறநெறி கல்வியை கற்பிக்க வேண்டியது அவசியமாகிறது.

நாட்டு நலன் கருதி மாண வர்கள் மத்தியில் அறநெறியை பயிற்றுவிக்கும் வகையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடதிட்டங்களில் அறநெறி அறிவியல் பாடத்தை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் சிபிஎஸ்இ-க்கும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் சிபிஎஸ்இ-க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்