குடியரசுத் தலைவருடன் நிதிஷ் இன்று சந்திப்பு: 130 எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்றார்

By பிடிஐ

பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் டெல்லியில் இன்று சந்திக்கிறார்.

இதற்காக தன்னை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களுடன் பாட்னாவில் இருந்து நேற்று அவர் விமானத்தில் டெல்லி சென்றார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 130 எம்எல்ஏக்களும் இரண்டு குழுக்களாக நேற்றிரவு டெல்லி சென்றடைந்தனர்.

ஆட்சி அமைக்க அழைக்குமாறு மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் நேற்றுமுன்தினம் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநர் இதுவரை எந்தப் பதிலையும் தெரிவிக்காதால் ஏற்கெனவே அறிவித்தபடி எம்எல்ஏக் களுடன் அவர் டெல்லி சென்றுள்ளார்.

இதனிடையே பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி நேற்று மாலை அமைச்சரவையை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் சட்டப்பேரவையை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

40 mins ago

உலகம்

54 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்