பாஜகவுடன் பிணக்கு இல்லை: உத்தவ் தாக்கரே உறுதி

By பிடிஐ

மகராஷ்டிரத்தில் ஆளும் பாஜக வுடன் பிணக்கு எதுவும் இல்லை என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் எளிதில் அணுகமுடியாத தொலைவில் உள்ள மக்களுக்காக சிவ ஆரோக்யா எனும் டெலி மெடிசன் திட்டத்தை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இல்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவது மட்டுமே எங்களது குறிக்கோள். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவரது தரப்பிலிருந்து எங்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை அமைச்சர் தீபக் சவந்த் கூறும்போது, “டெலி மெடிசன் சேவை மூலம், எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் உள்ள வர்களுக்கு நவீன மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் தொடர் பான அனைத்து வசதிகளும் கிடைக்கச் செய்யப் படும்.

எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ, இசிஜி, 2டி எக்கோ என அனைத்துமே, பெரிய திரைகளில் பார்க்க முடியும். மும்பையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் மருத்துவர்கள், நிபுணர்கள் ஆகி யோர், இவற்றைப் பார்த்து நோயாளிகள் தங்கள் இடத்தி லிருந்து வெளியேறா மலேயே மருத்துவ உதவிகளைப் பெற முடியும்.

தஹானு, சந்திரபுர் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக சோதனை அடிப்படையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, கட்சிரோலி, மேல்காட், மொகாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இதய நிபுணர், காது, மூக்கு தொண்டை நிபுணர், கட்டி அறுவைச் சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர் என 25க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்