பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது: நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் ஆவணத் திருட்டு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மக்களவையில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், மாநிலங்களவை யில் பெரும்பான்மை பலம் இல்லை. இதனால் மசோதாக்களை நிறை வேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

இந்நிலையில், நாடாளுமன் றத்தை சுமுகமாக நடத்த ஒத் துழைக்க வேண்டும் என்று நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கோரிக்கை வைத்தார். ஆனாலும், மத்திய அரசின் சமரச முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

குறிப்பாக நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபோல் மேலும் 5 அவசர சட்டங் களை கொண்டுவரும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுக்கு உதவாத மசோதாக் கள், அவசர சட்டங்களை நிறை வேற்ற காங்கிரஸ் ஆதரவு தராது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் செயல், பிரிட்டிஷ் ஆட்சியின்போது இருந்ததைவிட மோசமானது. இதை எதிர்த்துப் போராடுவோம்” என்றார்.

இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கூறும்போது, “நிலம் கையகப் படுத்துதல் தொடர்பான அவசர சட்டத்தை புதிய சட்டமாக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தி பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து வெங்கய்ய நாயுடு கூறும்போது, “நிலம் கையகப் படுத்துதல் மசோதா விவகாரம் உணர்வுப்பூர்வமானது. அரசியலாக் காமல் இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும். எந்த பிரச்சினை குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் கூடி விவாதித்து தீர்வு காண அரசு தயாராக உள்ளது” என்றார்.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் தர்ணாவில் ஈடுபடுகிறார். வரும் 25-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சவுத்ரி வீரேந்திர சிங் உள்ளிட்டோரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது, இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்