தாஜ்மகாலில் மின்னணு நுழைவுச் சீட்டு கட்டாயம்: போலிகளை ஒழிக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தாஜ்மகாலை காண மின்னணு நுழைவுச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி நுழைவுச்சீட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலில், போலி நுழைவுச் சீட்டுகளும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகாரால் மின்னணு நுழைவுச்சீட்டு கடந்த டிசம்பர் 25 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது, தாஜ்மகாலின் கிழக்கு மற்றும் தெற்கு வாயில்களில் மட்டும் விநியோகிக்கப்பட்டு வந்தது. போலி நுழைவுச் சீட்டுகளை முற்றிலும் ஒழிக்க அனைத்து வாயில்களிலும் மின்னணு நுழைவுச்சீட்டுகள் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின்னணு சீட்டுகளால் உண்மையான சுற்றுலாப்பயணி கள் எண்ணிக்கை தெரிவதுடன், போலி நுழைவுச் சீட்டுகளால் அரசுக்கு ஏற்பட்டு வந்த இழப்பும் தவிர்க்கப்படும்.

தாஜ்மகாலுக்கான மின்னணு நுழைவுச்சீட்டுகளை விநியோ கிக்கும் பொறுப்பு, ஐஆர்சிடிசி நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இணையதளத்திலும் கிடைத்து வரும் இந்த நுழைவுச் சீட்டை, மொபைலில் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

42 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்