இந்திய இளைஞர்களுக்கு வேலை தரும் முதலீட்டாளர்களுக்கு வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

By பிடிஐ

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், அமெரிக்காவின் ஜிஇ கார்ப்பரேஷன் நிறுவனம் உற்பத்திக் கூடத்தை நிறுவி உள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

இந்திய பொருளாதார வளர்ச் சிக்கு உதவும் எல்லா முதலீட்டாளர் களையும் நான் வரவேற்கிறேன். அதன்மூலம் இந்திய இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும்.

உங்கள் (முதலீட்டாளர்கள்) வளர்ச்சி எங்கள் வளர்ச்சியுடனும் தொடர்புடையது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், மிகத் திறமை வாய்ந்த இளைஞர்கள் கொண்ட இந்தியாவில் உங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய லாம் என்று பன்னாட்டு நிறுவனங் களுக்கு உறுதியாகக் கூறுகிறேன்.

இந்தியாவில் படித்த இளை ஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எங்கள் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்ட இளை ஞர்கள். அவர்கள் மிகத் திறமை யானவர்கள். எங்கள் திறமை வாய்ந்த இளைஞர்கள், உலக நாடுகளின் முதலீடுகளை கவரும் சக்தி படைத்தவர்கள். இங்கு வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நிர்வாக சூழலை உருவாக்கித் தருவோம். அதற்கேற்ப விதிமுறை களில் இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின், வரும் 28-ம் தேதி தனது முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதால், முழு சீர்திருத்தம் கொண்ட பட்ஜெட்டாக இது இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

கல்வி

16 mins ago

தமிழகம்

32 mins ago

வேலை வாய்ப்பு

55 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்