பாட்னா காவல் நிலையத்தில் தீ விபத்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் எரிந்து சாம்பல்

By செய்திப்பிரிவு

பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள தலைமை எஸ்.பி. அலுவல கத்தில் நேற்று தீ விபத்து ஏற் பட்டது. இதில் அங்கு வைக்கப் பட்டிருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் 300 தோட்டாக்கள் எரிந்து சாம்பலாயின.

தலைமை எஸ்.பி. ஜிதேந்திர ராணாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த அலுவல கத்தில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில், தீ விபத்து ஏற் பட்டது. அப்போது அங்கு வைக்கப் பட்டிருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் 300 தோட்டாக்கள் சாம்பலாகின.

அலுவலகத்தில் ஏற்பட்ட மின் கசிவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தீ அணைக்கப்பட்டாலும், அதற் குள்ளாக அங்கிருந்த துப்பாக்கி கள் மற்றும் தோட்டக்கள் சேத மடைந்துவிட்டதாக காவல்துறை யின் கூறினர்.

இந்தச் சம்பவத்தை மிகப் பெரிய தவறு என்று குறிப்பிட்டி ருக்கும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், துப்பாக்கிகளை கான்ஸ்டபிள்கள் எந்நேரமும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத் திருக்க வேண்டும். ஆனால் இந்தச் சம்பவத்தில் கான்ஸ்டபிள்கள் அவ்வாறு செயல்படவில்லை என்றார்.

மேலும், சம்பவம் அதிகாலையில் நடந்திருந்தாலும், அப் போதே தகவல் தெரிவிக் காமல் விடிந்த பிறகுதான் தகவல் அளித்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்காமல் தாங்களா கவே தீயை அணைத்துவிட்டதாக கான்ஸ்டபிள்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்