நித்யானந்தா ஆசிரம இளம்பெண் மரணத்தில் மர்மம்: விசாரணை கோரி பெற்றோர் புகார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவரது பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மகள் சங்கீதா (24), நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார். அதன் பிறகு ‘மா நித்யா துரியதீதானந்தா’ என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 28-ம்தேதி உடல்நிலை பாதிக்கப் பட்டு பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சங்கீதா உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை யில், “திடீர் மாரடைப்பு காரண மாகவே சங்கீதா உயிரிழந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் இதுபோல சிறு வயதி லேயே மாரடைப்பால் இறந்துள் ளனர். சங்கீதாவின் மரணத்துக்கு ஒருநாள் முன்னதாகக்கூட அவரது ஒன்றுவிட்ட சகோதரர் மாரடைப்பால் மரணமடைந் துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

ஆனால், சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருச்சியில் உள்ள ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் மீது சங்கீதாவின் தந்தை அர்ஜுனன், தாய் ஜான்சி ராணி ஆகியோர் புகார் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட பெங்களூரு ராமநகரம் காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து, அர்ஜுனன் தம்பதி பெங்களூருவில் உள்ள ராமநகரம் காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) சந்திரகுப்தாவை சனிக்கிழமை சந்தித்து புகார் மனு அளித்தனர். தங்களுடைய மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து எஸ்பி சந்திர குப்தா ‘தி இந்து’விடம் கூறும் போது, “சங்கீதாவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்றும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்