கேரள அரசுக்கு பின்னடைவு பாமாயில் இறக்குமதி வழக்கை கைவிட நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

1992ம் ஆண்டு அதிக விலைக்கு பாமாயிலை இறக்குமதி செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கை திரும்பப் பெற முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1992ம் ஆண்டு அதிக விலைக்கு 15,000 டன் பாமாயிலை மலேசி யாவில் இருந்து கேரள அரசு இறக்குமதி செய்தது. அதனால் அரசுக்கு ரூ.2.32 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி யைப் பிடித்த பிறகு இதுகுறித்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

அந்த வழக்கில் முன்னாள் முதல்வர் கே.கருணாகரன், முன் னாள் உணவுத்துறை அமைச்சர் டி.ஹெச். முஸ்தபா, அதிகாரிகள் பி.ஜே.தாமஸ் மற்றும் ஜிஜி தாம்ஸன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்தக் குற்றத்துக்கு அன்றைய நிதி அமைச்சர் உம்மன் சாண்டி சாட்சியாகக் கருதப்பட்டார்.

அதைத் தொடர்ந்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணை யரகப் பதவியில் இருந்து தாமஸ் விலகினார்.

இந்நிலையில், பாமாயில் இறக்குமதியின்போது எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த அதிகாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும் கூறி இந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேரள அரசு ஊழல்தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முறையிட்டது. ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டது. ஆனால் உயர் நீதிமன்றமும் அதை நிராகரித்து விட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்