மானிய விலையில் 5 கிலோ காஸ் சிலிண்டர் திட்டம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

மானிய விலையில் 5 கிலோ காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்.

ஒடிஸா தலைநகர் புவனேஸ் வரத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ஏழைகளுக்கான சிறப்பு காஸ் இணைப்பு திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.

கடந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத் தில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் (14.2 கிலோ) அல்லது 5 கிலோ எடை கொண்ட 34 சிலிண்டர்களை பெறும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வாடிக்கையாளர் களுக்கு மானிய விலையில் 5 கிலோ காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் திட்டத்தை அமைச்சர் நேற்று தொடங்கிவைத்தார். இவை அங்கீ காரம் பெற்ற சமையல் காஸ் முகவர்களிடம் மட்டுமே கிடைக்கும்.

தற்போது 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் சந்தை விலையில் பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மானியம் இல்லாத 5 கிலோ சிலிண்டர்கள் குறிப்பிட்ட மளிகை கடைகளிலும் விற்பனை செய்யப் படும் என்று எண்ணெய் நிறுவனங் கள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

ஏழைகளுக்கான காஸ் இணைப்பு

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்காக சலுகை கட்டணத்தில் புதிய சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கிவைத்தார். இதன்படி ஏழை, எளிய மக்கள் ரூ.1600 செலுத்தி புதிய காஸ் இணைப்பை பெறலாம். இத்திட்டம் வரும் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

26 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்