பிரதமரை பாராட்டி பேசியதாக துவிவேதி மீது காங்கிரஸ் தாக்கு: ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டம்

By பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசியதாக கட்சித்தலைவர் ஜனார்தன் துவிவேதியை கடுமை யாக விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, மோடியை தான் பாராட்டிப் பேசவில்லை என்றும் தான் சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கட்சியின் மூத்த தலைவரான ஜனார்தன் துவிவேதி பொதுச் செயலராக இருக்கிறார்.இந்தியத் துவம் பற்றி காங்கிரஸ் கட்சியின் யோசனைக்கு முற்றிலும் மாறான வகையில் அமைந்துள்ளது துவி வேதி சொன்ன கருத்து. மோடியின் வெற்றி எந்த வகையிலும் இந்தியத் துவத்தின் வெற்றியாகாது என்று நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார் காங்கிரஸ் பொதுச்செயலர் அஜய் மாக்கன்.

துவிவேதி கூறிய கருத்தை காங்கிரஸ் கடுமையாக ஆட்சேபிக் கிறது. பிரதமர் என்ற முறையில் மோடியின் 7 மாத ஆட்சியை மதிப் பிட்டால், 2002-ல் குஜராத்தில் அவர் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரத்தை நினைவுகூர்ந்தால் இந்தியத்துவத்தின் அடையாளமாக மோடி தெரியமாட்டார். டெல்லியில் கடந்த 7 மாத ஆட்சியில் எத்தனையோ வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மோடியின் தலைமையில் உள்ள தேசிய தலைநகரில் நடக்கும் வன்முறைசம்பவங்களை காணும்போது இந்தியத்துவத்தின் அடையாளம் பற்றி எப்படி பேசமுடியும்.

ஆட்சேபகர மொழியில் அமைச்சர்கள் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. துவிவேதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் விரைவில் முடிவு செய்யும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

10 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்