தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் செல்லும் விமானங்களில் தீவிர கண்காணிப்பு

By செய்திப்பிரிவு

தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

1999 காந்தஹார் விமான கடத்தலை போன்று மீண்டும் ஓர் இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திரா காந்தி விமான நிலைய பாதுகாப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று தீவிரவாத தடுப்பு ஒத்திகைகளில் ஈடுபட்டனர். விமான நிலையங்களில் பயணிகள் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

டெல்லி-காபூல் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சிக்கக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பதால் டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் நகரங்களுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி காபூல், காந்தஹார் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் ஆப்கானிஸ்தான் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்