போபால் சம்பவ நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி

By செய்திப்பிரிவு

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 30-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்தனர். இரு அவைகளிலும், உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மாநிலங்களவையி பேசிய அவைத்தலைவர் ஹமீது அன்சாரி: மனித உயிர்களை பலி வாங்கிய அந்தச் சம்பவம் இன்றும் நடுங்கவைக்கிறது. இப்போதும்கூட குழந்தைகள் போபால் விஷவாயுக் கசிவு வேதிப்பொருட்களால் பாதிக்கப்பட்டு பல்வேறு உடல் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். பெருந்துயரத்தில் இருந்து உயிர்பிழைத்த மக்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார்.

மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, "விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அவை ஆறுதலை தெரிவிப்பதோடு அவர்களோடு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்