காஷ்மீர் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 13 வீரர்கள் பலி; 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீரில் நேற்று ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 13 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியா யினர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப் பட்டனர்.

மேலும் 3 இடங்களில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் 2 பேரும், இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந் தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடு ருவிய தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் யூரி அருகேயுள்ள மோராவில் ராணுவ முகாம் உள்ளது. எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த முகாம் மீது நேற்று அதிகாலை 3 மணி அளவில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே காலை 9.30 மணி வரை கடும் சண்டை நடைபெற்றது. இதில் லெப்டினல் கர்னல் உட்பட 8 ராணுவ வீரர்களும் 5 போலீஸ்காரர்களும் உயிரிழந் தனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப் பட்டனர்.

இதேபோல் ஸ்ரீநகர் அருகே சவுரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படை வீரர்களின் பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கமாண்டர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பஸ் நிலைய குண்டுவீச்சில் 2 பேர் பலி

புல்வாமா அருகே டிரால் நகர பஸ் நிலையத்துக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

சோபியான் நகரில் உள்ள போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் நிலைய கட்டிடம் பலத்த சேதமடைந் தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்