4-ம் கட்ட தேர்தல்: ஜார்க்கண்ட், காஷ்மீரில் பிரச்சாரம் ஓய்ந்தது

By பிடிஐ

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 4-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

ஜம்மு காஷ்மீரில் நகர், அனந்தநாக், ஷோபியான், சம்பா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளுக்கு நாளை (டிசம்பர் 14) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்வர் ஒமர் அப்துல்லா, அவரது 3 அமைச்சர்கள், சபாநாயகர் முபாரக் குல், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது உட்பட 182 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுளனர். மொத்தம் 1,890 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 15 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் பல தொகுதிகள் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டவை. 3 அமைச்சர்கள், 11 எம்எல்ஏக்கள் உட்பட 217 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 16 பேர் பெண்கள். 43,48,709 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இரு மாநிலங்களிலும் 5-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

27 mins ago

ஓடிடி களம்

41 mins ago

க்ரைம்

59 mins ago

ஜோதிடம்

57 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்