கொஞ்சம் நடை, இடைப்பட்ட தூரத்துக்கு வாகனம்: தந்தை லாலுவைப் போல் அல்ல மகனின் பாத யாத்திரை

பிஹாரில் தனது தந்தை லாலு பிரசாத் யாதவை போல் அல்லாமல், பாத யாத்திரையை தொடங்கி வைத்துவிட்டு வாகனத் தில் ஏறிச் சென்றுள்ளார் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றா ததைக் கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த சுமார் ஐம்பது பேர் பாட்னாவில் விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்தினர்.

பீர் சந்த் பட்டேல் மார்க் பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த யாத்திரை 3 கி.மீ. தொலைவில் உள்ள தபால் நிலையம் வரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையை அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தலைமை தாங்கி நடத்த வந்தார்.

ஆனால், அனைவரும் எதிர் பார்த்தபடி அவர் கைகளில் கட்சிக் கொடியை பிடித்து கோஷமிட்டபடி கடைசி வரை செல்லவில்லை. மாறாக, வெறும் 20 மீட்டர் தூரம் மட்டும் நடந்த அவர், பத்திரிகையாளர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த பிறகு தனது வாகனத்தில் ஏறிச் சென்று விட்டார். இதுகுறித்து கட்சியினர் கேட்டதற்கு, தபால் நிலைய சாலையில் வந்து சந்திப்ப தாகக் கூறிச் சென்றவர் திரும்பி வரவே இல்லை.

அவர் பாத யாத்திரையில் கலந்து கொள்ள வந்துவிட்டு இடையில் வாகனத்தில் பயணம் செய்ததை பத்திரிகையாளர்கள் படம் எடுத்ததை அவர் தெரிந்து கொண்டார். இதனால் பாத யாத்திரை முடிவில் வந்து கலந்து கொண்டால், பத்திரிகையாளர் களிடம் சிக்கிக் கொள்வோம் என கருதிய தேஜ் பிரதாப் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், கட்சி எம்எல்ஏக்களை தனியாக அமர வைத்ததைக் கண்டித்து ராப்ரி தேவியின் அரசு வீட்டிலிருந்து சட்டப்பேரவை வரை தனது கட்சியினருடன் சுமார் ஐந்து கி.மீ. தூரத்துக்கு லாலு பிரசாத் பாத யாத்திரை சென்றார். ஆனால் தந்தையைப் போல் அல்லாமல், அவரது மகன் பாத யாத்திரையைத் தொடங்கி வைத்துவிட்டு பாதியிலேயே கிளம்பிச் சென்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்