பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி ரூபாய் நோட்டு: அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

கண் பார்வையற்றவர்களுக்காக ப்ரெய்லி குறியீடுகள் கொண்ட ரூபாய் நோட்டுகள் இந்த நிதியாண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஹெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

இதுகுறித்து மாநிலங்களவை யில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, எழுத்து மூலம் அவர் அளித்த பதில்:

பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி குறியீடுகள் கொண்ட ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்வது குறித்து தொடர்புடைய நிபுணர்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி

கனிமொழி எழுப்பிய மற்றொரு கேள்விக்கு சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

சுற்றுலா செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுலாத் துறையின் நிதியுதவி திட்டத்தின் மூலம் இதற்கான செலவுகளை செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சுற்றுலா செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வசதி யின்மை குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி மாற்றுத்திறனாளிக்கு வேண்டிய வசதிகளுடன் ஒவ்வொரு நகரத்தி லும் குறைந்தபட்சம் ஒரு விடுதி மற்றும் ரெஸ்டாரண்டு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்