ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிஹார் எம்எல்ஏக்கள் 4 பேர் பதவி பறிப்பு

By பிடிஐ

பிஹாரில் கட்சி விரோத நடவடிக் கைகள் காரணமாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களின் பதவி, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நேற்று பறிக்கப்பட்டது.

அஜீத் குமார் (முசாபர்பூர் கான்ட்டி தொகுதி), ராஜு சிங் (முசாபர்பூர் சாகேப்கஞ்ச்), பூணம்தேவி யாதவ் (ககாரியா), சுரேஷ் சஞ்சால் (முசாபர்பூர் - சக்ரா) ஆகிய 4 எம்எல்ஏக்களும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பிஹார் சட்டப்பேரவை செயலக அதிகாரி ஹரேராம் முகியா நேற்று தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 8 பேர் கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர். இதையடுத்து 4 எம்எல்ஏக்களின் பதவி கடந்த மாதம் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் அஜீத் குமார் உள்ளிட்ட எஞ்சிய 4 எம்எல்ஏக் களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதாக ஹரேராம் முகியா நேற்று கூறினார். இதனிடையே சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாக, பதவி பறிக்கப்பட்ட 4 எம்எல்ஏக்களும் நேற்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

க்ரைம்

11 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்