சாரதா குழுமம் மீது மேலும் 2 வழக்குகள்

By பிடிஐ

அசாம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது தொடர்பாக, சாரதா குழுமம் மீது சிபிஐ நேற்றும் மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரம் கூறியதாவது:

அசாம் மாநிலத்தில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சாரதா குழும நிறுவனங்கள் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு சிபிஐக்கு அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இதன் அடிப்படையில், சிபிஐ இணை இயக்குநர் ராஜீவ் சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் சாரதா குழுமம் மற்றும் அதன் தலைவர் சுதிப்தா சென் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இத்துடன் சாரதா குழுமத்தின் மீது மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மேற்குவங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அசாமிலும் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்