ஆந்திர முதல்வர் சென்ற பேருந்தில் புகை கிளம்பியதால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை ராஜமுந்திரியில் உள்ள செருகுரி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து மதுராபுடியில் உள்ள திருமண மண்டபத்துக்கு பேருந்து ஒன்றில் பயணித்தார். உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் மதுராபுடி சென்றார்.

சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தை பின் தொடர்ந்து வந்த பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநர் முதல்வர் சென்ற பேருந்தில் இருந்து புகை வருவதைப் பார்த்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக பேருந்தை நிறுத்தி முதல்வர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. வேறு ஒரு கார் மூலம் முதல்வர் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தின் இன்ஜினில் இருந்து புகை கிளம்பியது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்